
இப்பிரிவானது 1959 ஆம் ஆண்டு WH0 வின் உதவியுடன் அமைக்கப்பட்ட பிற்பாடு நோய்க் கட்டுப்பாட்டியல் பிரிவானது உலக சுகாதார நிறுவனத்தின் பொது சுகாதார ஆலோசகர் மற்றும் பொதுச் சுகாதாரத்தில் தகைமை பெற்ற உள்ளுர் மருத்துவ அதிகாரி என்போரால் இயக்கப்பட்டது. இவ் உள்ளுர் மருத்துவ அதிகாரியானவர் 1961 ஆம் ஆண்டில் நோய்கட்டுப்பாட்டுவியலாளராக முறைமை ரீதியாக நியமிக்கப்பட்டார். இவ் பிரிவானது பொதுச் சுகாதார மிருக வைத்திய சேவைகள் மற்றும் கொழும்பு 03 Chelsea Gardens இல் அமைந்துள்ள மருத்துவ புள்ளிவிபரவியலாளர் பிரிவு என்பவற்றுக்கு அருகாமையில் அமைந்திருந்தது.
இவ் வருடத்தின் 5 மாதங்களில் 15058 சந்தேகப்படும் டெங்கு நோய்களும், தீவு பூராகவுமுள்ள எல்லா நோய்பரவுகை கட்டுப்பாட்டியல் அலகிற்கு அறிக்கை செய்யப்பட்டுள்ளது.
அண்ணளவாக 42.25% அளவான டெங்கு தாக்கங்கள் மேல் மாகாணத்திலிருந்து அறிக்கையிடப்பட்டுள்ளது. அதிகளவிலான டெங்கு தாக்கங்களின் எண்ணிக்கையானது 3 மாதத்தின்பொழுது அறிக்கையிடப்பட்டுள்ளது.
இந்நிலைமையானதுநுளம்பைப் பரப்புவகைகளை சூழலில் இருந்து ஒழுங்குக் கிரமமாக அகற்ற வேண்டியதை வேண்டிநிற்கிறது. அதேவேளையில் நோயில்
3 நாள் காய்ச்சல் இருக்கும் சந்தரப்பங்களில் மருத்துவ கவனத்தை தேடுவதும் முக்கியமானதாக உள்ளது.
இலங்கையில் விசேடமாக காணப்படும் வலய நோய் Leptospirosis ஆகும். முன் அனுபவம் மற்றும் எமது தரவுகள் ஆவன இந் நோயானது பிரதானமாக நெல் பயிரிருடன் தொடர்புடையது என்பதைக் காட்டுகிறது. ஆகவே நெல் பயிரிடலுடன் ஈடுபட்டிருக்கும் ஆட்கள் நெல் வயற் பிரதேசத்தை சூழவுள்ள பகுதியை சுத்தமாக வைத்திருப்பதுடன், பயிரச்செய்கைக்கு முன்பதாக உள்ள நீரை அடித்து தள்ளுவதை உறுதிப்படுத்துமாறும் அறிவுரை கூறப்படுகிறார்கள். அத்துடன் வரம்பு ஒடுக்கமாக வைத்திருக்கப்படுவதுடன் எலிகளின் பொந்துகள் இல்லாததாகவும் வைத்திருக்கப்பட வேண்டும். இலங்கையில் நோய் தொற்றுக் காவியாக மிகவும் பொதுவாக எலியே காணப்படுவதனால் எலிப் பொந்துகளை அழித்துவிடும்படியும் நெல் வயலை சூழ உள்ள எலிகளை இல்லாதொழிக்கும்படியும் அறிவுரை கூறப்படுகிறது.
நெல் பயிர்ச்செய்கையில் ஈடுபடுபவர்கள் காய்ச்சல், தலையிடி மற்றும் அறிகுறிகள் காணப்படின் சுகாதாரக் கவனத்தை நாடிச் செல்வது முக்கியமானதாகும்.
மேலதிக தகவல்களை சுகாதார மருத்துவ அதிகாரியிடமிருந்தும், உங்கள் பகுதியின் பொதுச் சுகாதாரப் பரிசோதகரிடமிருந்தும் பெற்றுக்கொள்ளலாம்.

27-06-2011 to 29-06-2011 : எல்லா பதுளை மாவட்ட அரச சுகாதார களப் பணியாளர்களுக்குமான தடுப்பூசி பாதுகாப்பு மீதான பயிற்சி.

நடைமுறை H399 (தொற்றுநோய்களின் வாராந்த தொகுப்பு) அடிப்படையிலான நோய்க் கண்காணிப்பு முறைமையானது இலங்கையின்...

தடுப்பு தடுப்பூசி ஏற்பட்ட சில மணித்தியாலங்களில் ஐந்து மாதக் குழந்தையொன்று இறந்து விட்டதாக, புத்தளம் பிராந்திய நோய்ப்பரவுகைக்...
Let Sleeping Demons Sleep
| தோற்று நோய் விஞ்ஞான பகுதி, சுகாதார அமைச்சு, #231, டீ சேரம் இடம், கொழும்பு 10. தொ. பே : +94-001-2695112, +94-001-2681548 | பெக்ஸ் : +94-001-2696583 மின்னஞ்சல் : chepid@sltnet.lk (பிரதான அதிகாரி ), epidunit@sltnet.lk (தோற்று நோய் விஞ்ஞான பகுதி) |
|
![]() |
|
மேற்பார்வையின் கீழ் உருவாக்கப்பட்டது |